செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

சிம்மம்: தை மாத ராசி பலன்கள் 2020

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய்  -  பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி, கேது  - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வாழத் துடிக்கும் சிம்மராசியினரே, இந்த மாதம் உங்களின் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி  கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வெளியூர் செல்லும் போது சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். சில நேரங்களில்  நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து சில காரியங்களை நடத்தி வெற்றி காண்பீர்கள். தம்பதிகளிடையே  மனம் விட்டு பேசுவதன் மூலம்  நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன்  நடந்து கொள்வது நல்ல பலன் தரும். உடல் உபாதைகள் குறையும். உங்களின்  நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம்  கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறைமையை கண்டறிய மேலிடம் சில சோதனைகளைத் தருவார்கள். அதில் கவனமுடன் செயல்பட்டு  வெற்றியும் பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
 
கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். 
 
அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உங்களுக்கு  எதிரானவர்கள் உங்களின் பலத்தைப் புரிந்து கொண்டு விலகி விடுவார்கள்.
 
பெண்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து  நிகழ்ச்சியில் பங்கு பெறுவீர்கள். சந்தோஷங்கள் கிடைக்கும்.
 
மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  தடைகள் நீங்கும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.
 
மகம்:
 
இந்த மாதம் மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.  பணவரத்து கூடும்.
 
பூரம்:
 
இந்த மாதம் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி  காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய  பாக்கிகள் வசூலாகும். 
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனோ தைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து  திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உங்களை  பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  ருசியான உணவை உண்பீர்கள். 
 
பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி - சனி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 22, 23, 24.